Monday, March 12, 2012

சாத்தான்களின் வேதம் !!

          "ஊருக்குள்ள ஒரு ஜாதி கலவரத்த நாமளே தூண்டி விடனும், அத அடக்க ஒரு கமிட்டிய போடணும், அதுக்கு நானே தலைவன் ஆகணும்" - அமைதிபடை படத்தில் சத்யராஜ் பேசும் ஒரு வசனம்.
          அடடே, சமைச்ச ஆட, இலைல வச்சி சாப்பிடுவீங்க, சாப்டதுக்கப்பரம் அந்த இலைய ஆட்டுக்கே போடுவீங்க, என்னே மனித நேயமடா !! - விவேக் ஒரு படத்தில் பேசும் நகைச்சுவை வசனம்.   
         நேற்று விஜய் டிவியில், நீயா நானா பார்க்கும்போது இதெல்லாம் நினைவிற்கு வந்தது.சப்ஜெக்ட் என்னன்னா, டிவி சீரியல்கள் மக்களை, எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பது ! இடையிடயே தொலைகாட்சியில் வரும் ஆபாச நிகழ்சிகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றியும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுகொண்டிருந்தது. கோபி மிகவும் சீரியசாக, தனியார் தொலைகாட்சிகள்  நமது வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வரும் ஆபாசத்தை பற்றி சாடிக்கொண்டிருந்த்தார்.
           என்னை போறுத்தவரையில், விஜய் டிவி வருவதற்கு முன்பு தனியார் தொலைகாட்சிகளின் தரம் அப்படி ஒன்றும் மெட்சும்படியாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நாகரீகத்துடன், ஆபாச கலப்பில்லாமல் இருந்தது.
               தனியார் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளின் தரத்தை நாம் இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். "வி முன்" , "வி பின்" - விஜய் டிவி வருவதற்கு முன், விஜய் டிவி வந்ததற்கு பின். விஜய் டிவி வரும் முன், பெரும்பாலான நிகழ்சிகள் சினிமா சார்ந்தவையாகவே இருந்தது. இதுதவிர மாலை வேலையில் சில சீரியல்களையும் ஒளிபரப்பி வந்தனர்.  
             விஜய் டிவி வந்த பின், தொலைக்காட்சி நிகழ்சிகள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. ரியாலிட்டி ஷோ, எனும் பெயரில் இவர்கள் நடத்திய, நடத்தி கொண்டிருக்கும் கூத்துகள் கொஞ்சநஞ்சமல்ல. ஜோடி நம்பர் 1 , என்னும் நிகழ்ச்சி மூலமாக,  இவர்கள்தான் முதல்தலில் ஆபாசகூத்தை நமது இல்லங்களில்  கொண்டுசேர்த்தனர். இன்று இவர்களே இதற்கு எதிரானவர்கள் போல் ஒரு நிகழ்ச்சி நடத்தி தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் போல் காட்டிகொல்கின்றனர். "ஆஹா, உங்கள் சமூக பொறுப்புணர்ச்சியை நினைத்தால் மெய் சிலிர்கிரேதே"
         சில நாட்கள் தூங்கிக்கிடந்த "கோடீஸ்வரன்" நிகழ்ச்சியையும் தூசி தட்டி புது பொலிவுடன் ஆரம்பித்துவிட்டனர். இதில் SMS மூலம் இவர்கள் சம்பாதித்த  கோடிகளும், கேட்கப்படும் கேள்விகளும் சமீப நாட்களாக இனைய தளங்களை  நாரடித்துகொண்டிருக்கிறது.  
         யார் கண்டார், நாளைக்கு இவர்களே "அவனா இவனா" என்றொரு நிகழ்ச்சி நடத்தி அதில் நீயா நானாவின் போலித்தனத்தையும், கோடி நிகழ்ச்சியின் தில்லுமுள்ளையும் படம் போட்டு காட்டி, கல்லா கட்டுவார்கள். அதையும் நாம் இருகரம் கூப்பி, கைதட்டி வரவேற்க இப்பொழுதே தயாராவோம் !!

Sunday, March 11, 2012

ஆண் பாவம் !!

     "இந்த வீட்ல யாரும் என்ன பத்தி யோசிக்கறதே இல்ல, அண்ணனுக்கு மட்டும் இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம், எனக்கும் சேத்து பொண்ணு பாக்க சொல்லு" - பேரன் !
      டேய், அவன் உன்னவிட ரெண்டு வயசு மூத்தவண்டா - பாட்டி !
      சரி, ரெண்டு வயசு சின்ன பொண்ணா பாத்து எனக்கு கட்டி வைக்கறது - பேரன் !
       உங்கப்பன் உனக்கு பொண்ணு பாக்க மாட்டேங்கறான்னு ஏன்டா கவலபடரே, அதான் நான் இருக்கன்ல என்ன கட்டிக்க  - பாட்டி !
      போற போக்க பாத்தா அதான் நடக்க போகுது - பேரன் !
      அடி செருப்பால, எங்கம்மாவையா கட்டிக்க போற - அப்பா !
      ஏன், நீ மட்டும் எங்கம்மாவ கட்டிக்கலாம், நான் உங்கம்மாவ கட்டிக்ககூடாத ?

                சென்ற வாரம், ஆதித்யா சேனலில், "ஆண் பாவம்" படம் போட்டுருந்தான் .இந்த படத்தை இயக்கும்போது பாண்டியராஜனுக்கு 20  வயதுக்கும் குறைவு என்பதை சத்தியமாக நம்பமுடியாது. இளம் வயது இயக்குனர் என்ற பெருமை படைத்த இயக்குனரின் இந்த படம், இப்போது பார்கும்போதும்கூட வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

                 தனது அண்ணனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் தந்தை, தனக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஏக்கத்தை காட்சிக்கு காட்சி, தனது பேச்சின் மூலம் தந்தைக்கு புரிய வைக்க இவர் படும் பாடு அனைத்தும் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.
       தனக்கும் பெண்பார்க்க சொல்லி பாட்டி மூலம் தந்தையிடம் தெரியபடுத்டுவார். அதற்க்கு அப்பவோ,

"இவன ஒரு வினோபா மாதிரி, விவேகானதர் மாதிரி, வள்ளலார் மாதிரி ஆக்க போறேன், ஏன்னா என்ன மாதிரி தைரியசாலி பாரு" என்பார்.
 உடனே பாண்டி அப்பாவிடம், " ஏம்பா உன்கிட்ட நான் தைரியசாலின்னு சொன்னனா "?
அப்ப நீ கோழைன்ரியா ?
ஆமா !
பயந்தான்கோளின்ரியா ??
ஆமா !
அறிவிலைன்றிய ?
ஆமா !
அட தூ உனக்கு எவன்டா பொண்ணு கொடுப்பான் !! பேமானி !!

மேலும் பல இடங்களில் சிரிப்பை தூண்டும் வசனங்கள் !!
சாம்பிள் சில !!

15  காசுக்கு எவன்டா படம் காட்டுவான்? சரி, ரெண்டு ரீல் மட்டும் பாத்துட்டு போ !!

பையன் முழி தான் திருட்டு முழியே தவிர, ஆள் ரொம்ப நல்லவன், இல்லம்மா ??
ஏங்க என்ன பாத்தா திருடன் மாதிரியா தெரியுது ! வீட்ல கட்டு கட்டா பணம் இருக்கும்போது கூட 5  ரூவாக்கு மேல எடுத்ததே கிடையாது !!

டேய் தம்பி, வண்டி ரிவர்ஸ் எடுக்கறேன், பின்னாடி முட்டினா சொல்லு !!
முட்டுச்சா ?
முட்லங்க !!
முட்டுச்சா ?
முட்லங்க !!
முட்டுச்சா ?
முட்ல வாங்க !

இப்ப முட்டிடுச்சு !!


நேரம் கிடைத்தால் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய, எவர் கிரீன் காமெடி கும்மி !!!

 கொசுறு !!

இந்த படத்தில் ரமேஷ் கண்ணா, ஒரு சின்ன காரக்டரில் வந்து போவார். இதில் அவர் உதவி இயக்குனாராக பனி புரிந்திருப்பார். திரை உலகில் ஒருவன் வெற்றி பெற எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். இயக்குனராக இவர் இன்னும் வெற்றி பெறவே இல்லை,
எதிர்பாராமல் நகைச்சுவை நடிகனாக மாறி, சில நாட்கள் கலக்கினார், அவ்வளவே.